நம்மவர் 66 மகளிர் அணியின் பிரமாண்ட பிரச்சாரம் வியக்கும் வகையில் உள்ளது..இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், வெங்கட்ராமன், லோகநாதன் அனைவரின் முயற்சி வெற்றி கிட்ட வாழ்த்துக்கள் 🙏🙏

26 Feb, 2021 10:50

Source : 

Download Share

பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு.

26 Feb, 2021 05:23

Source : 

Download Share

பட்டாசுத் தொழில்துறையில், பாதுகாப்புக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் என்ன என்று நீதிமன்றம் சினக் கேள்வி எழுப்பி முடிப்பதற்குள் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு ஆறு பேர் பலியாகியிருக்கிறார்கள். இனியும் அரசு மௌனம்தான் காக்கப்போகிறதா?

25 Feb, 2021 16:23

Source : 

Share

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்து புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்திருக்கிறார்கள். ஜனநாயகத்தையே வெட்கப்படவைக்கும் இச்செயலுக்கு, குடியரசு என்ற பெயர் என்ன பொருத்தம்?

25 Feb, 2021 16:07

Source : 

Share

போராடும் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தையில் இறங்காமல் மிரட்டுவது அரசின் ஆணவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது . அதுவும் டார்ச் லைட் வெளிச்சம்...(2/2)

25 Feb, 2021 15:12

Source : 

Share

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் சாலைகள் காலியாக உள்ளன. 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரிப் போராடினால், ‘ஒழுங்கு நடவடிக்கை’ என்று மிரட்டுகிறது அரசு. (1/2)

25 Feb, 2021 15:12

Source : 

Share

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் உடல்நிலை குறித்து வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.

25 Feb, 2021 11:30

Source : 

Share

கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது.

25 Feb, 2021 11:05

Source : 

Share

இன்றைய புத்தகப் பரிந்துரை பகல் 12.15 மணிக்கு. ஈடில்லாப் புத்தகங்களுக்கு  இதயத்திலும் இல்லத்திலும் இடம் கொடுப்போம்.

25 Feb, 2021 06:41

Source : 

Share

எதற்காகக் கடன் வாங்கினார்கள்? என்ன விதத்தில் செலவு செய்தார்கள்?  இத்தனை லட்சக்கணக்கான கோடிகளில் மக்களுக்கு ஓரிரு துளியேனும் சென்று சேர்ந்ததா? எதற்கேனும் கணக்கு உண்டா? தேர்தலுக்கு முன்னதாக இக்கடன்களைப் பற்றிய முழுமையான அறிக்கை வந்தே தீரவேண்டும். (2/2)

24 Feb, 2021 13:25

Source : 

Share

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று - தமிழக அரசு வாங்கியிருக்கும் கடன்களைப் பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும் என்பது. இப்போது அரசின் செய்திக் குறிப்பின்படியே,  ஒவ்வொரு தமிழனின் தலையிலும் 65,000 ரூபாய் கடன் சுமை இருக்கிறது. (1/2)

24 Feb, 2021 13:25

Source : 

Share

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும்.

24 Feb, 2021 11:17

Source : 

Share

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது. அன்றாடம் ஒரு நூலை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் நேரலையில் பரிந்துரைக்க இருக்கிறேன். வாருங்கள் நண்பர்களே, இன்று மதியம் 12.30 மணிக்கு புத்தகங்களோடு உரையாடலைத் துவங்குவோம்.

24 Feb, 2021 06:40

Source : 

Share

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வென்றுள்ள இடங்கள் உடைக்க முடியாத இரும்புக் கோட்டை என்று ஜனநாயகத்தில் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மக்கள் நலனை முன்னிருத்தி களமாடுபவர்களை மக்கள் கைவிட்டதே இல்லை. தமிழகத்திலும் இது நிகழும். #இனி_நாம்

23 Feb, 2021 16:41

Source : 

Share

டோரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கக் கோரிய எனது அறிக்கைக்கு உடனே செவி சாய்த்து 1 கோடி ரூபாய் நிதிநல்கை அறிவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். வெல்க தமிழ்!

23 Feb, 2021 13:59

Source : 

Share

பேட்டரி டார்ச் சின்னத்தை ஊரறியச் செய்யும் மக்கள் நீதி மய்யத்தின் தளகர்த்தர்களுள் ஒருவரான ஜெகதீஷின் உத்வேகத்தில் மகிழ்கிறேன். மக்கள் நீதி மலரட்டும். @JagadishGods

23 Feb, 2021 13:33

Source : 

Download Share

சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக.

23 Feb, 2021 11:33

Source : 

Share

மொழி வளர கைகொடுங்கள் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை

22 Feb, 2021 12:22

Source : 

Download Share

மனிதருக்குள் என்ன, உயர்வு தாழ்வா? அதைக் கற்பித்து வாழ்வதுவும் மனித வாழ்வா? சமூக நீதி நாள் இன்று உலகத்துக்கு. அக்குணமே உயிர்மூச்சு மய்யத்துக்கு. அனைவரும் சமமென்னும் பொன்னுலகம் நாம் படைப்போம்.

20 Feb, 2021 05:29

Source : 

Share

உலக தாய்மொழிகள் தினத்தன்று கி.ராஜநாராயணனின் ‘மிச்சக் கதைகள்’ நூல் வெளியாக இருப்பது பொருத்தப்பாடு மிக்கது. கிராவுக்கு வயது 99. இந்த வயதிலும் அவரது படைப்பிலக்கியப் பங்களிப்பு தொடர்வது தமிழுக்குப் பெருமை. கிராவைப் போற்றுவோம்.

19 Feb, 2021 09:48

Source : 

Share

நூல்களைப் படிப்பவரை நூலறிஞர் என்போம். எண்ணிறந்த ஓலைச் சுவடிகளை நூல்களாக்கித் தந்தவரை என்ன சொல்லிப் போற்ற? இன்று நாம் வாசிக்கும் எத்தனையோ புத்தகங்களுக்குக் காரணமாக இருந்த உ.வே.சாமிநாதையரை உந்திய ஆர்வத்தை, அன்னாரின் பிறந்த நாளில் வணங்குவோம்.

19 Feb, 2021 05:59

Source : 

Share

இத்தகு முன்னோடிகளிடமிருந்துதான் நான் உத்வேகம் கொள்கிறேன்...

18 Feb, 2021 06:06

Source : 

Download Share

மாணவர்களின் மீது அரசியல் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. மாணவர்களின் தாக்கம் அரசியலில் இருப்பதே நியாயம். அடக்குமுறைகளுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.

16 Feb, 2021 07:17

Source : 

Share

பொதுநலனுக்காகப் போராடும்போதெல்லாம் தேச துரோக சட்டத்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலத்தின் அடாவடி. அது இன்னும் தொடர்வது அவமானம். இந்த அச்சுறுத்தல் சட்டத்தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆகவேண்டும்.

16 Feb, 2021 07:17

Source : 

Share

கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்.

16 Feb, 2021 07:17

Source : 

Share

சினிமா எழுதுவதில் முன்னோடி, இந்திய சினிமாவின் தந்தை தாதாசாஹேப் பால்கே நல்ல சினிமாக்காரர்களுக்கு கிரியாஊக்கியாக இருந்திருக்கிறார்! மேற்கின் ராட்சசக் கலையை நம் நாட்டுக்கேற்ப வடிவமைத்த அவரின் 57ஆம் நினைவு நாளில் அவரை வணங்கி கலைவழி நடக்கிறேன்.

16 Feb, 2021 03:31

Source : 

Share

2021 தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். #தலை_நிமிரட்டும்_தமிழகம்

15 Feb, 2021 13:44

Source : 

Download Share

பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்.

15 Feb, 2021 05:28

Source : 

Share

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் நினைவு நாள் இன்று. 70 பேருந்துகளில் சென்ற 2,500 ரிசர்வ் படையினர், வெடிப் பொருட்கள் நிரம்பிய வாகனத்தால் தாக்கப்பட்டதில் 40க்கும் அதிகமானோர் உயிரைப் பறிகொடுத்தார்கள். அவர்களின் உயிர் ஈகையை நினைவுகொள்வோம்.

14 Feb, 2021 05:24

Source : 

Share

காதலினால் சாதிகள் போகும். காதலினால் சமநிலை ஆகும். காதலினால் பெண்மை உயரும். பெண் உயர்ந்தால் ஆண்மை மிளிரும். மனிதர் உயர்வில் சமூகம் உயரும். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.

14 Feb, 2021 05:06

Source : 

Share

Kamal Haasan

Actor

Kamal Haasan is an Indian actor, politician, film director, screenwriter, producer, playback singer and lyricist who works primarily in Tamil cinema.

Born : 7 November 1954 (age 63 years), Paramakudi

Spouse : Sarika (m. 1988–2004), Vani Ganapathy (m. 1978–1988)

Wikipedia